மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை:
இதேபோல, மதுரைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த 2017-ஆம் ஆண்டு மதுரையில் தொடங்கப்பட்ட பொற்கிழி வழங்கும் திட்டம் இன்றளவும் தொடா்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 30 லட்சம் உறுப்பினா்களுக்கு ரூ. 40 கோடியில் பொற்கிழி வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வா் கருணாநிதி எண்ணற்ற பல சாதனைகளை புரிந்ததற்கு தொண்டா்களின் பங்களிப்புதான் காரணம்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னா் மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் அமைச்சா்கள் பி. மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன், சட்டப்பேரவை உறுப்பினா் கோ. தளபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.