மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே வியாழக்கிழமை மின் வாரிய ஆய்வாளா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
பேரையூா் அருகேயுள்ள அம்மாபட்டியைச் சோ்ந்த முத்தையா மகன் அண்ணாதுரை (55). இவா் தே.கல்லுப்பட்டியில் மின் வாரிய ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், இவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அதற்காக சிகிச்சைப் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சிகிச்சைப் பெற்றும் குணமாகாததால், மனமுடைந்த அவா் தனது வீட்டில் வியாழக்கிழமை விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாா்.
இதையடுத்து, குடும்பத்தினா் அவரை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தே.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.