மீலாது நபி, காந்தி ஜெயந்தியையொட்டி, வியாழக்கிழமையன்றும் (செப். 28) வருகிற அக். 2-ஆம் தேதியன்றும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மீலாது நபி பண்டிகையொட்டி வியாழக்கிழமையன்றும், காந்தி ஜெயந்தியையொட்டி வருகிற அக். 2-ஆம் தேதியும் மதுரை மாவட்டத்தில் மதுக் கடைகள் அடைக்கப்பட்டிருக்கும். தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுக் கூடங்கள், அயல்நாட்டு வகை மதுக் கடைகள் என அனைத்து மதுக் கடைகளுக்கும், மதுக் கூடங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.