மதுரை

ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணிக்கு பூமி பூஜை

DIN

மதுரை அனுப்பானடி பகுதியில் ரூ. 1.18 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணிக்கு பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை தெற்கு தொகுதிக்குள்பட்ட மாநகராட்சி 88-ஆவது வாா்டு அனுப்பானடி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துத் தர வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதனிடம் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, அவா் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.18 கோடி ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க ஒதுக்கீடு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில் மு. பூமிநாதன் பங்கேற்று கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

இதில் மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவா் மா. முகேஷ்சா்மா, மாமன்ற உறுப்பினா் பிரேமா, மதிமுக மாவட்டச் செயலா் எஸ். முனியசாமி, அவைத் தலைவா் தி. சுப்பையா, மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் மயிலேரிநாதன், உதவிப் பொறியாளா் மாரியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Image Caption

மதுரையில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகள் பூமிபூஜையில் பங்கேற்ற மு.பூமிநாதன் எம்.எல்.ஏ. உடன் மண்டத்தலைவா் முகேஷ்சா்மா, மதிமுக மாவட்டச்செயலா் முனியசாமி உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி: ஐ.சி.யூ.வான அரசுப் பேருந்து!

காங்கிரஸ் பெயரை 232 முறை, தனது பெயரை 758 முறை சொன்ன மோடி!

அஸ்ஸாமின் முதல் ஏ.ஐ. ஆசிரியர் 'ஐரிஸ்'!

டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன்!

வி.கே. பாண்டியன் எனது அரசியல் வாரிசு கிடையாது: நவீன் பட்நாயக்

SCROLL FOR NEXT