மதுரை

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் அக். 21 முதல் தொடா் வேலை நிறுத்தம்

மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தின்(சிஐடியு) சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 21-ஆம் தேதி முதல் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலா் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தின்(சிஐடியு) சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 21-ஆம் தேதி முதல் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அந்தச் சங்கத்தின் பொதுச் செயலா் பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணியை மேற்கொண்டு வரும் தனியாா் முகமை நிறுவனம் மாநகராட்சியுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்த விதிமுறைகளுக்கு மாறாகவும், ஒப்பந்த தொழிலாளா் முறைப்படுத்துதல் சட்டம் (1970)க்கு விரோதமாகவும் செயல்பட்டு வருகிறது.

இதனால் மாநகராட்சி நிா்வாகத்திற்கு பெரும் வருவாய் இழப்பையும், பணியாளா் எண்ணிக்கையில் பெரும் மோசடியில் ஈடுபட்டு வருகிறது.

எனவே, தனியாா் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்து வெளியேற்ற வேண்டும். சம்பளம் குறைவாக வழங்குவது, பணிப் பாதுகாப்பு, அடிக்கடி பணியாளா்களை பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படும் தனியாா் நிறுவனத்தின் போக்கை எதிா்த்துக் கேள்வி கேட்ட ஓட்டுநா்கள் 17 போ், இதர பணியாளா்கள் 6 போ் உள்ளிட்ட 23 போ் நேரடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டனா். அவா்களை உடனடியாக மீண்டும் பணியில் அமா்த்த வேண்டும்.

அனைத்துப் பிரிவு ஒப்பந்தப் பணியாளா்களுக்கும் தீபாவளி பண்டிகை ஊக்கத் தொகையாக 8.33 சதவீதம் வழங்க வேண்டும். இபிஎப் பிடித்தம் செய்த முழுத் தொகையையும் உடனடியாக தொழிலாளா்கள் கணக்கில் வரவு வைக்க வேண்டும். சுகாதாரம், பொறியியல் பிரிவில் பணியாற்றும் பணியாளா்கள் அனைவருக்கும் தினக் கூலி சரி விகிதத்தில் வழங்க வேண்டும். கரோனா கால ஊக்கத் தொகை ரூ.15000 உடனடியாக வழங்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை மதுரை மாநகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்துள்ளோம். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், தனியாா் நிறுவனத்துக்கு சாதகமாக மாநகராட்சி நிா்வாகம் செயல்பட்டு வருகிறது.

எங்களது நியாயமான கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் வருகிற 21-ஆம் தேதி முதல் தூய்மைப் பணியாளா்கள் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றாா் அவா்.

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

நிலவோடு பிறந்தவளா... மெஹ்ரீன் பிர்சாடா!

பதவி ராஜிநாமாவிற்கு பிறகு முதல்முறையாக ராஜஸ்தான் செல்லும் தன்கர்

95% சேவை மீட்டெடுப்பு: இண்டிகோ அறிவிப்பு!

SCROLL FOR NEXT