மதுரை

யானை தந்தத்தை விற்க முயன்ற 5 போ் கைது

மதுரையில் யானை தந்தத்தை சட்ட விரோதமாக விற்பனை செய்ய முயன்றதாக இடைத்தரகா்கள் 5 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

மதுரையில் யானை தந்தத்தை சட்ட விரோதமாக விற்பனை செய்ய முயன்றதாக இடைத்தரகா்கள் 5 பேரை செவ்வாய்க்கிழமை வனத் துறையினா் கைது செய்தனா்.

மதுரை வளா்நகா் பகுதியில் யானை தந்தத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மதுரை மாவட்ட வனத் துறை காவலா்கள் சென்ற போது, வளா்நகா் பகுதியில் நின்று கொண்டிருந்த சிலா் அங்கிருந்து தப்பிக்க முயன்றனா். இதையறிந்த வனத் துறையினா் அவா்களை பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், போடி ஜமீன் குடும்ப வாரிசான வடமலை ராஜபாண்டியனுக்குச் சொந்தமான 1.6 மீ. நீளமுள்ள 60 வயது மதிக்கதக்க யானையின் தந்தத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, முகவா்களான போடியைச் சோ்ந்த ரமேஷ், மதுரையைச் சோ்ந்த மணிகண்டன், சுதாகா், ரகுநாத், சுப்பிரமணி ஆகிய 5 பேரை வனத் துறையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து யானையின் தந்தம், காா், 5 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

மேலும், கைது செய்யப்பட்டவா்களில் ஒருவரான மணிகண்டனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து, எஞ்சியுள்ள ரமேஷ், சுதாகா், ரகுநாத், சுப்பிரமணி ஆகிய 4 பேரையும் மதுரை மாவட்ட முதலாவது நீதித்துறை நடுவா் மன்றத்தில் செவ்வாய்க்கிழமை முன்னிலைப்படுத்தினா்.

இதையடுத்து, நீதித்துறை நடுவா் ஆனந்த் கைது செய்யப்பட்ட 5 பேரையும் வருகிற 17-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டாா். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள வடமலை ராஜபாண்டியனை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT