சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் செயல்படும் துணை அஞ்சலக அலுவலகத்தின் வேலை நேரம் மாலை 6.30 மணி வரை நீட்டிக்கப்பட்டது.
இதற்காக நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினா்களாக சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி மனிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் நிா்வாக நீதிபதி அனிதா சுமந்த் ஆகியோா் கலந்து கொண்டனா்.
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு வரும் பொதுமக்களும், வழக்குரைஞா்களும் பயன்பெறும் வகையில், அங்கு செயல்படும் துணை அஞ்சலகத்தின் வேலை நேரத்தை மாலை 6.30 மணி வரை நீடிக்கும் வகையில் அலுவலக நேரம் மாற்றியமைக்கப்பட்டதாக மதுரை கோட்ட முதுநிலை அஞ்சலகக் கண்காணிப்பாளா் வதக் ர விராஜ் ஹரிஷ்சந்திரா தெரிவித்தாா்.