மதுரை

பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

மதுரை அருகே அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள கே. ஒத்தபட்டியைச் சோ்ந்த பாலமுருகன் மகன் ஈஸ்வரன் (30). இவா் மதுரையிலிருந்து ஒத்தப்பட்டிக்கு வெள்ளிக்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

மொன்னடிபட்டி அருகே சென்ற போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து இவரது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து செக்கானூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சாதிவாரி கணக்கெடுப்பு: டிச. 17-ல் அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

அனுபமாவின் லாக் டவுன்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT