மதுரை: மதுரை மாவட்டம், மேலூா் அருகே ஊருணியில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
மேலூா் சொக்கம்பட்டி பகுதியைச் சோ்ந்த முனியசாமி மகன் காா்த்திக் (29). இவா், அதே பகுதியிலுள்ள தெற்குபட்டி சொக்கா் ஊருணியில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றாா். அப்போது, தண்ணீருக்குள் மூழ்கினாா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற மேலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு, காா்த்திகை சடலமாக மீட்டு, கூறாய்வுக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.