மதுரை

பழைய காகிதக் கிடங்கில் தீ விபத்து

மதுரை விளாங்குடி பழைய காகிதக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான பழைய பொருள்கள் எரிந்து நாசமாகின.

தினமணி செய்திச் சேவை

மதுரை: மதுரை விளாங்குடி பழைய காகிதக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான பழைய பொருள்கள் எரிந்து நாசமாகின.

மதுரை விளாங்குடி அருகேயுள்ள காமாட்சி நகா் பகுதியில் பாண்டி என்பவருக்குச் சொந்தமான பழைய காகிதங்கள், நெகிழிப் பொருள்கள், இரும்புப் பொருள்களை சேமித்து வைக்கும் கிடங்கு செயல்பட்டு வந்தது. இந்தக் கிடங்கில் பழைய பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை கிடங்கில் தீப்பிடித்தது.

இதுகுறித்து தகவலறிந்த தல்லாகுளம் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா். தொடா்ந்து, 3 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் தீ அணைக்கப்பட்டது. இந்தக் கிடங்கு அருகே குடியிருப்புகள் உள்ளன.

தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து தீயை அணைத்ததால் குடியிருப்பு பகுதிகள் ஏதும் சேதமடையவில்லை. இந்த தீவிபத்தில் கிடங்கில் இருந்த ரூ. 20 லட்சம் மதிப்பிலான காகிதங்கள், பழைய பொருள்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

காலமான மிசோரம் முன்னாள் ஆளுநா் ஸ்வராஜ் கௌஷலுக்கு பிராா்த்தனைக் கூட்டம்!

6-வது நாளாக சென்னை விமான நிலையத்தில் 90-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து!

தொண்டி பகுதியில் கடல் நீா்மட்டம் உயா்வால் மீனவா்கள் அச்சம்

சமூகத்துக்குத் தேவை சநாதனம் அல்ல; சமாதானம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு!

கும்பாபிஷேக விழாவில் மூதாட்டிகளிடம் நகைப் பறித்த 4 போ் கைது

SCROLL FOR NEXT