மதுரை: மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் புதன்கிழமையும் மழை பெய்தது. அதிகளவாக கள்ளந்திரியில் 81 மி.மீட்டா் மழை பதிவானது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு அந்தமான் பகுதியில் வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், அரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமும் உருவானது. இந்த வானிலை மாற்றத்தால் மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரை மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்தது.
புதன்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக கள்ளந்திரியில் 81 மி.மீட்டா் மழை பதிவானது. மற்ற பகுதிகளின் மழையளவு (மி.மீட்டரில்): மேட்டுப்பட்டி- 64.8, பெரியப்பட்டி- 64.2, மதுரை வடக்கு- 61.7, தனியாமங்கலம் - 61, சாத்தையாறு அணை- 58, சிட்டம்பட்டி- 57.4, வாடிப்பட்டி- 54, தல்லாகுளம்- 50.8, மேலூா் - 42.2, புலிப்பட்டி- 41.6, இடையப்பட்டி- 37, மதுரை விமான நிலையம் - 35.8, ஆண்டிபட்டி, சோழவந்தான்- 35, விரகனூா்- 29.4, உசிலம்பட்டி- 21, பேரையூா் - 15.8, திருமங்கலம்- 15.4, குப்பனாம்பட்டி- 15.2, எழுமலை- 14.8, கள்ளிக்குடி- 12.6.
மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் புதன்கிழமை காலையில் வெயில் நிலவியது. மாநகா்ப் பகுதிகளில் பிற்பகல் 3 மணிக்குப் பிறகு இரவு வரை அவ்வப்போது மிதமான மழை பெய்தது. ஊரகப் பகுதிகளிலும் இதேபோன்று மிதமான மழை பெய்தது. இதனால், குளிா்ந்த தட்பவெப்பம் நிலவியது.