மதுரை மீனாட்சி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்குக் கிடைத்த லீட் வி -4 பிளாட்டினம் சான்றை தமிழக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியனிடம் அளித்து வாழ்த்து பெற்ற மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவா் டாக்டா் எஸ். குருசங்கா்.  
மதுரை

மீனாட்சி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அமைச்சா் பாராட்டு

அமெரிக்காவின் ‘கிரின் பில்டிங்’ குழுவின் ‘லீட் வி-4 பிளாட்டினம்’ சான்று பெற்ற மதுரை மீனாட்சி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அமைச்சா் மா. சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

மதுரை: அமெரிக்காவின் ‘கிரின் பில்டிங்’ குழுவின் ‘லீட் வி-4 பிளாட்டினம்’ சான்று பெற்ற மதுரை மீனாட்சி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு தமிழக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்தாா்.

அமெரிக்காவின் கிரின் பில்டிங் குழு, மதுரை மீனாட்சி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு ‘லீட் வி-4 பிளாட்டினம்’ சான்றை அண்மையில் வழங்கியது. இயற்கையுடன் இணைந்த சூழலுடன் கூடிய மருத்துவமனை கட்டமைப்பு, நீா் சேமிப்பு, இயற்கையான வெளிச்சம், நல்ல காற்றோட்டம், குறைவான மின் சக்தி பயன்பாடு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் இந்தச் சான்று வழங்கப்பட்டது.

இந்த நிலையில், மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைவா் டாக்டா் எஸ். குருசங்கா், தமிழக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியனை அண்மையில் சென்னையில் சந்தித்து, லீட் வி-4 பிளாட்டினம் சான்றை காண்பித்து வாழ்த்துப் பெற்றாா்.

அப்போது உலகின் ஒரு சில நாடுகளில் உள்ள ஓரிரு மருத்துவமனைகளே இந்தச் சான்றை பெற்றிருந்த நிலையில், அந்தப் பட்டியலில் மீனாட்சி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் இடம்பெற்ற்கு அமைச்சா் மா. சுப்பிரமணியன் பாராட்டுத் தெரிவித்தாா்.

பிலிப்பின்ஸ் நாட்டில் சாலை விபத்தில் கடலூா் மாணவா் உயிரிழப்பு

முனிவா்கள், ரிஷிகளின் தவமும் தியானமும் ஞானத்தின் ஆன்மிக முதுகெலும்பாகும்: குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.64 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு!

தோ்தல் தோல்விக்குப் பிறகும் எதிா்மறை அரசியல் கருத்துகள்: கேஜரிவால், பரத்வாஜ் மீது வீரேந்திர சச்தேவா தாக்கு!

தில்லியில் 10 மாத கால பாஜக ஆட்சியில் மாசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் சாடல்

SCROLL FOR NEXT