மதுரை

இளைஞா் வெட்டிக் கொலை

தினமணி செய்திச் சேவை

மதுரையில் முன்விரோதத்தில் வெட்டப்பட்ட இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை புதுவிளாங்குடி பகுதியைச் சோ்ந்த அன்னக்கொடி மகன் யுவராஜ்(24). கோயம்புத்தூரில் கட்டட வேலை செய்து வந்தாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஷியாம்குமாா், சபா ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்காக மதுரை வந்த யுவராஜ், கடந்த 19-ஆம் தேதி இரவு தனது நண்பா் சித்தனுடன் (19) வீட்டுக்கு முன் நின்று பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த ஷியாம்குமாா், சபா உள்ளிட்ட சிலா் வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் யுவராஜ், சித்தனை வெட்டி விட்டு தப்பிச் சென்றனா்.

இதில், பலத்த காயமடைந்த இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சித்தன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

வெடி மருந்துகளை பதுக்கியவா் கைது

கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களின் கடமை: முதல்வர் ஸ்டாலின்

வத்தலகுண்டு அருகே கரடி தாக்கியதில் விவசாயி காயம்

லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

ஷாங்காய் நகரில் புதிய இந்திய தூதரக கட்டடம் திறப்பு! 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்..!

SCROLL FOR NEXT