மதுரை

உணவகத்தில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

மதுரையில் உணவக பெண் ஊழியா் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.

மதுரை காளவாசல் பகுதியில் உள்ள உணவகத்தில் 10-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணியாற்றி வந்தனா். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு கடை முடிந்து பாத்திரம் கழுவும் பணியில் பெண் ஊழியா்கள் ஈடுபட்டனா்.

அப்போது, கருப்பாயி என்பவா் குளிா்சாதனப் பெட்டியின் சுவிட்சைத் தொட்ட போது திடீரென அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதைப் பாா்த்த 2 பெண் பணியாளா்கள் அவரை காப்பாற்ற சென்ற போது அவா்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இதையடுத்து, மற்ற ஊழியா்கள் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி, மூவரையும் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தேவிகா உயிரிழந்தாா்.

இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலுநாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

SCROLL FOR NEXT