மண்டபத்தில் தானியங்கி மீன் வளர்ப்பு ஆய்வுக் கூடம் துவக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையத்தில் தானியங்கி மீன் வளர்ப்பு ஆய்வுக் கூடம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையத்தில் தானியங்கி மீன் வளர்ப்பு ஆய்வுக் கூடம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார். மத்திய கடல் மீன் உதவி தலைமை இயக்குநர் மதன்மோகன், மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் சைதாராவ், இந்திய கடலோர காவல் படை அதிகாரி ஹெச். ஹெச். மோர், மண்டபம் ஆராய்ச்சி நிலைய பொறுப்பாளர் கோவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குநர் மற்றும் மத்தியஅரசு வேளாண் ஆராய்ச்சி கல்வித்துறை செயலர் ஐயப்பன் ரூ. 2 கோடி மதிப்பிலான தானியங்கி மீன் வளர்ப்பு நீர் மறுசுழற்சி ஆய்வுக் கூடம்,
தேசிய கடல்மீன் வங்கி, மீன் வளர்ப்புத் தொட்டி, இணையதள பயிற்சி தங்கும் விடுதி ஆகியவற்றை திறந்து வைத்து கூறியதாவது:
Advertisement
Advertisement
தானியங்கி மீன் வளர்ப்பு தொட்டியில் 2 மீன்களை போட்டு வளர்த்தால் 25 நாளில் முட்டையிடும். ஓர் ஆண்டில் இம் மீன்கள் 18 கிலோ ஆகும். 2.5 வருடத்தில் 30 கிலோ எடை ஆகிவிடும். இம்மீன்கள் நிறைய உற்பத்தி ஆகி அரசு உதவி பெறும் மீன் பண்ணைகளில் வளர்க்கப்படும். தேசிய கடல்வங்கி மூலம் சூறைமீன், முட்டப் பாறை, கடல் விரால், அலங்கார மீன்கள் ஆகியவை இந்த வங்கி மூலம் வளர்க்கப்படும்.
மேலும் இந்தியாவில் கடலில் இருந்து பெறப்படும் உணவு உற்பத்திக்கு தேவையான பங்களிப்பு மீன் வளர்ச்சியில் தான் கிடைக்கிறது. சமீப காலங்களில் கடல் மீன்பிடி அதிகபட்ச உற்பத்தி நிலையை அடைந்துவிட்டது. மீன்கள் தட்ப வெப்பநிலை சுழற்சி முறை போன்ற சூழ்நிலையை வைத்து தான் உற்பத்தியாகின்றன. மீன் வளர்ப்பதற்கு அதிக கொள்ளளவு கொண்ட கான்கிரீட் தொட்டிகள் மற்றும் கடல் ஓரத்தின் அருகில் உருவாக்கப்பட்ட குளங்கள் அனைத்தையும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.