ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் வைகாசி விசாகத் திருவிழா

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள  வினை தீர்க்கும் வேலவர் ஆலயத்தில் புதன்கிழமை வைகாசி விசாகத் திருவிழாவை

DIN

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள  வினை தீர்க்கும் வேலவர் ஆலயத்தில் புதன்கிழமை வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்தும், பூக்குழி இறங்கியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
ராமநாதபுரம் வினைதீர்க்கும் வேலவர் ஆலயத்தில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த மே 29-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக புதன்கிழமை பட்டினம் காத்தான் ஸ்ரீவிநாயகர் ஆலயத்திலிருந்து பால் குடங்கள் எடுத்து வரப்பட்டு  முருகப்பெருமானுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம், விசேஷ தீபாராதனைகள் நடைபெற்றன.
விழாவை முன்னிட்டு முருகப்பெருமான் சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து கோயிலில் நடந்த அன்னதானத்தை பட்டினம் காத்தான் ஊராட்சி முன்னாள் தலைவர் எம். சித்ராமருது தொடங்கிவைத்தார். இரவு பக்தர்கள் காவடியுடன் பூக்குளி இறங்கும் வைபவமும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தல - சின்ன தல... மலேசியாவில் அஜித் - சிம்பு சந்திப்பு!

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

போதைக் கோதை... மேகா சுக்லா!

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

SCROLL FOR NEXT