ராமநாதபுரம்

கோடை மழையால் விதைப்பு: கமுதி விவசாயிகள் ஆயத்தம்

கமுயில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கோடை மழையால் கமுதி சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் நிலங்களில் உழுது, விதைக்க ஆயத்தமாகியுள்ளனர்.

DIN

கமுயில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கோடை மழையால் கமுதி சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் நிலங்களில் உழுது, விதைக்க ஆயத்தமாகியுள்ளனர்.
 கமுதி, கோட்டைமேடு, கடம்பன்குளம், கருங்குளம், சோடனேந்தல், அபிராமம், நெடுங்குளம், நகர்த்தார் குறிச்சி, பாப்பணம், தரைக்குடி, வல்லந்தை, புனவாசல், காக்காகுளம், பேரையூர், செங்கப்படை, முதல்நாடு, முஸ்டக்குறிச்சி, தலைவநாயக்கன்பட்டி, கீழராமநதி, கிளாமரம், காவடிபட்டி, ராமசாமிபட்டி, கோரைப்பள்ளம், கூலிபட்டி, உள்ளிட்ட கமுயின் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் கோடை மழை பெய்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது தங்களது வயல்களில் கோடை உழவு பணிகள் செய்து, நெல்,  மிளகாய், கடலை, பருத்தி, சோளம், கம்பு. கேள்வரகு, சாமை, குதிரைவாலி, உளுந்து, பாசி ஆகியவற்றை பயிரிட ஆயத்தமாக உள்ளனர்.
  இது குறித்து கமுதி விவசாயிகள் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பருவமழை முறையாக பெய்யாததால் தொடர்ந்து வறட்சி ஏற்பட்டு விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோடை மழை முறையாக பெய்துள்ளது. அதனால் கலத்தில் பருவமழை பெய்யும் என்ற முழு நம்பிக்கையில் வயல்களில் கோடை உழவுப் பணிகளை செய்து முழு நம்பிக்கையில் உள்ளோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னல் பார்வை... அவந்திகா மோகன்!

பயணத்தின் தொடக்கம்... ஸ்வக்‌ஷா!

கிரிக்கெட் வீராங்கனை பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: தில்லி முதல்வர் அறிவிப்பு

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

SCROLL FOR NEXT