ராமநாதபுரம்

ராமேசுவரம் கோயிலில் சிருங்கேரி பாரதீ தீர்த்த சுவாமிகள் சிறப்பு பூஜை

சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடாதிபதி பாரதீ தீர்த்த சுவாமிகள் ராமேசுவரம் ஸ்ரீராமநாதசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தார்.

DIN

சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடாதிபதி பாரதீ தீர்த்த சுவாமிகள் ராமேசுவரம் ஸ்ரீராமநாதசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தார்.
 சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடாதிபதி பாரதீ தீர்த்த சுவாமிகள், ஸ்ரீ விதுசேகர பாரதீ தீர்த்த சுவாமிகள் ஆகியோர் ராமேசுவரம் ஸ்ரீராமநாதசுவாமி கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்திருந்தனர். புதன்கிழமை 2 ஆவது நாளாக கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய அவர்கள் வருகை தந்தபோது,   கோயில் மரபுப்படி கோயில் இணை ஆணையாளர் சி.செல்வராஜ் தலைமையில் கோயில் மூத்த குருக்கள் கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.
பின்னர் சுவாமிகள் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கோடித் தீர்த்தக் கிணற்றில் புனித நீராடினர். இதனைத் தொடர்ந்து ராமேசுவரம் ஸ்ரீராமநாதசுவாமி கோயில் கருவறையில் உள்ள சிவலிங்கத்திற்கு 11 வகையான அபிஷேகங்கள் செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகளும, தீபாராதனைகளும் நடந்தன. பின்னர் அருள்மிகு பர்வதவர்த்தினி அம்மனின் கருவறைக்கு சென்று சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் உதவி ஆணையாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிவாரி கணக்கெடுப்பு: டிச. 17-ல் அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

அனுபமாவின் லாக் டவுன்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT