ராமநாதபுரம்

தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகளால் விபத்து அபாயம்

திருவாடானை அருகே மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகள் சாலையை கடந்து செல்வதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர்.

DIN

திருவாடானை அருகே மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகள் சாலையை கடந்து செல்வதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர்.
 திருவாடானை அருகே கல்லூர், பாரதி நகர், சூச்சனி,
இளமணி போன்ற பல்வேறு பகுதிகளில் அதிகமான ஆடு, மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கால்நடைகள் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்வதாலும், சாலையில் படுத்துக் கிடப்பதாலும் இவ்வழியாக செல்லும் இரு சக்கர வகான ஓட்டிகள், கார், சரக்கு வாகன ஓட்டிகள் விபத்து அபாயம் இருப்பதாக புகார் தெரிவித்தனர்.
 இது குறித்து திருவாடானையைச் சேர்ந்த அனல் ஆனந்த் கூறுகையில், வீட்டில் வளர்க்கபடும் கால்நடைகளை கட்டி வளர்க்க வேண்டும். கால்நடைகள் சாலையில் விடுவதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. எனவே தோட்டத்திலோ அல்லது வீட்டிலோ தான் கட்டி வளர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT