பரமக்குடி நகராட்சியில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து காணப்படுவதால், அப்பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது.
பரமக்குடி நகராட்சி 36 வார்டுகளைக் கொண்டது. இங்கு சின்னக்கடைத் தெரு, உழவர் சந்தை, எஸ்.எம்.அக்ரகாரம், எஸ்.எஸ்.கோவில் தெரு, கொல்லம்பட்டறைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் மற்றும் தரமற்ற வாருகால் அமைக்கும் பணிகள் காரணமாக கழிவுநீர் கால்வாய் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது.
சேதமடைந்த பகுதிகளில் கழிநீர் தேங்கியுள்ளது. அதில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் நிலவிவருகிறது.
மேலும், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் கழிவு நீர் செல்லும் கால்வாய் முழுவதும் ஆக்கிரமித்து அடைத்துக் கொள்வதால், நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் இப்பகுதிகளில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளாமலும், கழிநீரை அகற்றும் பணியில் ஈடுபடாமலும் சென்று விடுகின்றனர்.
இதுபோன்ற இடங்களில் தெருக்களில் கழிவுநீர் பாய்ந்து சுகாதாரமற்ற நிலை ஏற்படுகிறது. பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாய் மற்றும் வாருகால் பகுதியை முறையாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.