முதுகுளத்தூர்,கடலாடி பகுதியில் புதன்கிழமை மதியம் முதல் மாலை வரை இடியுடன் கூடிய மழை பெய்ததில் 10 வீடுகள் சேதம் அடைந்தன.
சூறாவளிக் காற்று, இடியுடன் சுமார் 2 மணி நேரம் பெய்த மழையினால், பல இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன. முதுகுளத்தூர் அருகே மேலச்சாக்குளம் கிராமத்தில் சூறாவளியுடன் பெய்த மழையில் கருப்பசாமி, தனிக்கோடி,திருமூர்த்தி, முத்துமுனியாண்டி, கிருஷ்ணன், காளிமுத்து, கிழவத்தேவர் உள்பட 10 பேரின் ஓட்டு வீடுகளில் இடிவிழுந்து ஓடுகள் சேதம் அடைந்தன.
இது குறித்து முதுகுளத்தூர் வட்டாட்சியரிடம் தகவல் தெரிவித்துள்ளதாக கிராம மக்கள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.