ராமநாதபுரம்

அழகன்குளம் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

ராமநாதபுரம் அருகே அழகன்குளத்தில் அமைந்துள்ள சிவகாமி சமேத நடராஜர் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

DIN

ராமநாதபுரம் அருகே அழகன்குளத்தில் அமைந்துள்ள சிவகாமி சமேத நடராஜர் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
 இத்திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் புதன்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கின. இதனைத் தொடர்ந்து தனபூஜை,கலச பூஜை,நவக்கிரக ஹோமம் ஆகியனவும் நடைபெற்றது.  
வியாழக்கிழமை இரண்டாவது நாளாக கோ.பூஜை,சுமங்கலி மற்றும் தம்பதியர் பூஜை ஆகியனவும் நடந்தது. வெள்ளிக்கிழமை காலையில் கஜபூஜை முடிந்தவுடன் யாக சாலையிலிருந்து புனித நீர்க்குடங்கள் ராஜகோபுரத்திற்கு சிவாச்சாரியார்களால் எடுத்து செல்லப்பட்டு காலை 9 மணி முதல் 9.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மூலவரான அருள்மிகு நடராஜருக்கும்,சிவகாமி உள்பட பல்வேறு பரிவார தெய்வங்களுக்கும் சிபு அபிஷேகமும்,விசேஷ தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.
பின்னர் அன்னதானமும், மாலையில் திருக்கல்யாண வைபவமும்,இரவு திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. யாகசாலை பூஜைகள் திருவாடானை சிவாச்சாரியார் வி.ஆதிரெத்தினம் தலைமையில் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை அழகன்குளம் செங்குந்த முதலியார் சமூகத்தினர் மற்றும் திருப்பணிக் குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

SCROLL FOR NEXT