திருவாடானை அருகே திருப்பாலைக்குடியில் இருந்து மதுரைக்கு இயக்கபட்ட வந்த அரசு பேருந்து கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தபட்டதால் இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாக புகார் தெரிவித்தனர்.
திருவாடானை அருகே திருப்பாலைக்குடியில் இருந்து சோழந்தூர், ஆட்டாங்குடி, பனிதாவயல், சாலைக்கிராமம் உள்ளிட்ட 30-க்கும்மேற்பட்ட கிராமங்கள் வழியாக மதுரைக்கு அரசு பேருந்து இயக்கபட்டு வந்தது.
திருப்பாலைக்குடியில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் இந்த பேருந்து மதுரை சென்று பின்னர் திரும்பி வந்து மாலை 3.15-க்கு மீண்டும் அதே வழியில் மதுரைக்கு செல்லும். கடந்த இரண்டு மாதங்களாக இப்பேருந்து இயக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் மாணவ மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
எனவே சம்பந்த பட்ட துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து மீண்டும் பேருந்தை இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.