ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து அக்கல்லூரி முதல்வர்(பொறுப்பு) ஆ.குருசாமி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்: ராமநாதபுரம் சேதுபதி அரசினர் கலைக் கல்லூரியில் இயற்பியல் துறையில் 3 பேர், ஆங்கிலத்துறைக்கு ஒருவர் மற்றும் வேதியியல் துறைக்கு ஒருவர் என தாற்காலிக கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் செப். 8- ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை விதிகளின்படி நியமனம் நடைபெறும். விண்ணப்பிக்க விரும்புவோர் தன்விபரப் பட்டியலுடன் அனைத்து ஆவண நகல்களுடனும் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும் என அச்செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.