ராமநாதபுரம்

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்

கமுதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

DIN

கமுதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை விவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் பணிபுரியும் அலுவலர்கள்   நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தற்போது கமுதியில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரவி கமுதி கிராம ஊராட்சிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அந்த பணியில் இருந்த வெங்கடேஸ்வரன் ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி உதவி கண்காணிப்பாளராகவும், நயினார் கோவில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளராக பணியாற்றிய தங்கப்பாண்டியன் கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பணி ஒதுக்கீடு செய்யப்படாமலிருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி நயினார்கோவில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளராக பணியமர்த்தப்பட்டுள்ளனர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

களம்காவல் முதல்நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலு நாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT