முகப்பு
ராமநாதபுரம்

எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

கமுதியில் எம்.ஜி.ஆரின்., 102 ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திங்கள்கிழமை  நடைபெற்றது. 

Updated On : 23 ஜனவரி 2019, 8:04 am IST
பகிர்:

கமுதியில் எம்.ஜி.ஆரின்., 102 ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திங்கள்கிழமை  நடைபெற்றது. 
கமுதி பெருமாள் கோயில் திடலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அ.தி.மு.க., ஒன்றிய செயலர் எஸ்.பி.காளிமுத்து தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் முனியசாமிபாண்டியன் (கடலாடி), அந்தோணிராஜ் (சாயல்குடி) முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில், முன்னாள் எம்.பி., நிறைகுளத்தான் சிறப்புரையாற்றினார். மாநில மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா, மாவட்ட வழக்குரைஞர் பிரிவு இணை செயலாளர் சங்கரபாண்டியன், எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலர் கிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர். நகர ஜெயலலிதா பேரவைச் செயலாளர் சதீஸ்குமார் வரவேற்றார். கமுதி இளைஞரணி செயலாளர் வேலவேந்தன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.