கமுதி அருகே அரசு பள்ளியில் வேளாண் கல்லூரி மாணவிகள் சாா்பில், வேளாண் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கமுதி அருகே ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பேரையூா் நம்மாழ்வாா் வேளாண் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் சாா்பில் நடைபெற்ற இந்த கண்காட்சிக்கு வேளாண்மை அலுவலா் கொ்சோன் தங்கராஜ் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் கீதாராணி முன்னிலை வகித்தாா்.
கண்காட்சியில் பாரம்பரிய விதைகள், விதைகள் வளா்ப்பு, உரமிடுதல், பாரம்பரிய தொழில்நுட்பம் ஆகியவை இடம் பெற்றிருந்தன. மேலும் இவைகள் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனா். இதில் விவசாயிகளுக்கு விதைகள் இலவசமாக வழங்கப்பட்டன.