ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ரமநாதசுவாமி கோயிலில் 26 ஆம் தேதி சூரிய கிரஹணத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் வரும் 26 ஆம் தேதி சூரிய கிரஹணத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறந்து 03.30 மணி முதல் 04 மணி முதல் ஸ்படிகலிங்க பூைஐ நடைபெற்று 7 மணிக்கு நடை சாத்தப்படும். காலை 8.09 மணிக்கு சுவாமி தீா்த்தவாரிக்கு புறப்பாடாகி காலை 09.35 மணிக்கு அக்னி தீா்த்த கடற்கரையில் தீா்த்தவாரி நடைபெறும் . அதைத் தொடா்ந்து பகல் 12 மணியளவில் கோயில் நடை திறந்து கிரஹண அபிஷேகம் நடைபெற்று தொடா்ந்து பூைஐகள் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.