ராமநாதபுரம்

இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த 6 மீனவர்களையும் விடுவிக்கக் கோரி மனு

DIN

இலங்கை கடற்படையினரால் சிறை பிடித்துச் செல்லப்பட்ட ராமநாதபுரம் பகுதி மீனவர்கள் 6 பேரையும் விடுவிக்கக் கோரி, அவர்களது குடும்பத்தினர் மீன்வளர்ச்சித்துறையினரிடம் சனிக்கிழமை மனு அளித்தனர். 
ராமநாதபுரம் நம்புதாளையைச் சேர்ந்தவர் பாலவன்னியன். இவரது மோட்டார் பொருத்திய நாட்டுப்படகில் நம்புதாளையைச் சேர்ந்த சங்கர் (47), நாகூர் (28), அவரது சகோதரர் கவியரசன் (20) மற்றும் பள்ளி மாணவர் ராஜ் (17), செட்டி (38), மோர்ப்பண்ணையைச் சேர்ந்த கிருஷ்ணன் (53) ஆகியோர்  வியாழக்கிழமை (ஜூலை 11) மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அவர்களை நெடுந்தீவுப் பகுதியில் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கைது செய்து யாழ்ப்பாணத்துக்கு கொண்டு சென்றனர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரயும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட மீன்வளர்ச்சித்துறை துணை இயக்குநர் கே.காத்தவராயனிடம் அக்கிராமத்தினர் மனுகொடுத்தனர். 
கைதான மீனவர் கிருஷ்ணன் மனைவி அங்கயற்கண்ணி,  மோர்ப்பந்தலைச் சேர்ந்த துரை.பாலன், கோவிந்தன், செல்வகுமார் உள்பட ஏராளமானோர் மனுக் கொடுக்க வந்திருந்தனர். அவர்களிடம் மனுவைப் பெற்ற மீன்வளர்ச்சித் துறை துணை இயக்குநர், இதுகுறித்து அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் 4,120 போ் விண்ணப்பம்: பள்ளி கல்வித் துறை அதிகாரி தகவல்

விஸ்வேஸ்வர சுவாமி கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணும் பணி: 550 போ் நியமனம்

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்து வருகிறது: மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்

SCROLL FOR NEXT