ராமநாதபுரம்

செல்லிடப்பேசி கடைகளில் திருட்டு: 3 பேர் கைது

DIN

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதி செல்லிடப்பேசி கடைகளில் திருடிய 3 இளைஞர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து, மடிக்கணினி மற்றும் செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உள்பட்ட தினைக்குளம், குத்துக்கல்வலசை மற்றும் திருப்புல்லாணி பஜார் பகுதிகளில் கடந்த கடந்த ஜூன் 23, 29 மற்றும் ஜூலை 13 ஆகிய நாள்களில் கண்ணன், தியாகராஜன், முனியசாமி ஆகியோரது செல்லிடப்பேசி மற்றும் அரிசி கடைகளில் செல்லிடப்பேசி, மடிக்கணினி, ரொக்கப் பணம் திருடப்பட்டன.
திருப்புல்லாணி காவல்துறையினர் இது தொடர்பாக விசாரித்து வந்தனர். திருடு போன கடைகளில், பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், மூன்று பேர் திருட்டில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. 
திருடப்பட்ட செல்லிடப்பேசிகளின் ரகசிய எண்கள் மூலம், அவற்றின் செயல்பாடு குறித்து சிறப்பு குற்றப்பிரிவு காவல்துறை உதவி ஆய்வாளர்கள் நவநீதிகிருஷ்ணன், ஜேசுதாஸ், குகன் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் கண்காணித்து வந்தனர். 
இந்நிலையில், திங்கள்கிழமை திருடப்பட்ட செல்லிடப்பேசி, ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே இயங்கத் தொடங்கியது. இதனை கண்காணித்த தனிப்படையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று 3 பேரை பிடித்தனர். விசாரணையில் அவர்கள், சின்ன சேலத்தை சேர்ந்த வெங்கடேஷன் (22), அழகன்குளத்தை சேர்ந்த மகேந்திரன் (35) மற்றும் திருச்சி முசிறியை சேர்ந்த லோகநாதன் (44) ஆகியோர் என தெரியவந்தது. மூவரும் கிராமங்களில் உள்ள கடைகளில் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது. 
இதனையடுத்து 3 பேரையும் கைது செய்து ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் திங்கள்கிழமை அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT