ராமநாதபுரம்

திருவாடானை, கமுதி கோயில்களில் கும்பாபிஷேகம்

DIN

திருவாடானையில்  வர்ண தீர்த்த வடகரையில் உள்ள ஸ்ரீ மகாலிங்கம் கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை முதற்கால பூஜை நடைபெற்றது. திங்கள்கிழமை காலை இரண்டாம் கால பூஜை நடைபெற்றதைத் தொடர்ந்து சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பிற்பகல் அன்னதானம் வழங்கபட்டது.
கமுதி: கமுதி அருகே கிடாரிகுளத்தில் உள்ள ஸ்ரீதர்ம முனீஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீமுனீஸ்வரர், ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பணசாமி, ஸ்ரீபத்திரகாளியம்மன், ஸ்ரீ சித்தி, புத்தி விநாயகர், பூர்ணா புஷ்பசலா சமேத அய்யனார் கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
  கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டன. திங்கள்கிழமை கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் முனீஸ்வரர் கோயிலுக்கு அக்னிசட்டி ஏந்தி, நேர்த்திக் கடன் செலுத்தினர். கலை நிகழ்ச்சிகள், நாடகம் நடைபெற்றன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிடாரிகுளம் பூலித்தேவன் இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர். 
இதே போல் கமுதி எட்டுக்கண் பாலம் அருகே உள்ள ஆதிபராசக்தி கோயிலில் நூதன புனரா வர்த்தன அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகளான நாகராஜன், முனியசாமி, பழனிச்சாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மேலரத வீதியில் அமைந்துள்ள பொக்கிசமா காளியம்மன் மகாமுனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சனிக்கிழமை முதல்கால யாக பூஜை, ஞாயிற்றுக்கிழமை 2 ஆம் கால மற்றும் 3 ஆம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை காலை 6.30 மணிக்கு 4 ஆம் கால யாகபூஜையைத் தொடர்ந்து காலை 9.45 மணிக்கு விமானம் மற்றும் மூலஸ்தானத்திற்கு சிவாச்சாரியர்களால் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் மகா தீபாராதனையும் காட்டப்பட்டது. இவ்விழாவில் மலேசியா தாமரை குழுமம் டத்தோ துரைசிங்கம்பிள்ளை,  திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோரும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பொக்கிச மா காளியம்மன் கோயில் அறப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT