ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு  பள்ளிகளில் திங்கள்கிழமை கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.
பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற விழாவில் பள்ளித் தாளாளர் எம். சாதிக்அலி தலைமை வகித்தார். ஜமாத் சபைத் தலைவர் எஸ்.என்.ஏ. முகம்மதுஈசா, செயலாளர் எஸ்.சிகாபுதீன், பொருளாளர் இ.முகம்மதுஉமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் எம்.அஜ்மல்கான் வரவேற்றார். காமராஜரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவரது வாழ்க்கை வரலாறு குறித்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 ஆயிர வைசிய மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி முதல்வர் ஆர்.ஜெயபிரமிளா தலைமை வகித்தார். துணை முதல்வர் பி.கே.ஆர்.கவிதா வரவேற்றார். நிகழ்ச்சியில் காமராஜரின் உருவப் படத்திற்கு பள்ளி மாணவர்கள் மரியாதை செலுத்தினர். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பரமக்குடி ஒன்றியம் பாம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் ம.இருளன், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தாமரை செல்வி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சேவுகப்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் ஜேம்ஸ்மனுவேல் வரவேற்றார். பள்ளி வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வ.உ.சி. மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாளாளர் எஸ்.சுந்தரேசன் தலைமை வகித்தார். பொருளாளர் ஆர்.எஸ்.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் பி.மகாதேவன் வரவேற்றார். காமராஜரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவாடானை: திருவாடானை அருகே தினைகாத்தான்வயல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காமராஜரின் பிறந்த நாள் விழாவில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் லதா, ஆசிரியர்கள் மகமாயி, வனஜா, அமுதா, சுரேஷ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரிமயாதை செலுத்தப்பட்டது. மாணவ மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி ஓவிய போட்டி கட்டுரை போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
நம்புதாளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமை ஆசிரியர் ஜான்தாமஸ் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செய்யது யூசுப் முன்னிலை வகித்தார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
தொண்டி கிழக்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியம், பேச்சு, கட்டுரை போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பரிசுகளை வழங்கினார். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றன. ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முதுகுளத்தூர்: சாயல்குடி அருகே உச்சிநத்தம் ஸ்ரீஆறுமுகவிலாஸ் இந்து தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமை ஆசிரியர் சுந்தரமகாலிங்கம் தலைமை வகித்தார். கல்விக்கண் திறந்த காமராஜர் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. 
கடலாடி வட்டம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மாணவர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன் தலைமை வகித்தார். உதவிஆசிரியர் பொ.அய்யப்பன் "காமராஜரின் எளிமை மற்றும் கல்விப்பணி" பற்றி குறித்து மாணவர்களிடத்தில் உரை ஆற்றினார். மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. 
முதுகுளத்தூர் காமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் தாளாளர் செல்வக்குமார் தலைமை வகித்தார். நிர்வாக மேலாளர் பி.ரவீந்திரன், பொருளாளர் முத்துமுருகன், பள்ளியின் முதல்வர் எம்.பாண்டிச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் நிர்வாகம் சார்பில் தங்க நாணயம் வழங்கப்பட்டது. 
முதுகுளத்தூர் ஸ்ரீகண்ணா மெட்ரிக் பள்ளியில் நிறுவனர் காந்திராஜன் தலைமையில், முதல்வர் ஆட்லின் லீமா முன்னிலையில் விழா கொண்டாடினர். 
சாயல்குடி வி.வி.எஸ்.எம் மலட்டாறு மெட்ரிக்பள்ளியின் நிறுவனர் சத்தியமூர்த்தி தலைமையில் முதல்வர் அங்காள ஈஸ்வரி முன்னிலையிலும், சிக்கல் இந்தியன் மெட்ரிக் பள்ளியில் தாளாளர் ரபீக்முகம்மது தலைமையிலும் விழா கொண்டாடினர்.
முதுகுளத்தூர் அருகே மு.தூரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் காளிமுத்து தலைமையில் விழா நடைபெற்றது. மாணவ, மாணவிகள் விடுதலை போரட்ட தலைவர்கள் வேடம் அணிந்து மாறு வேட போட்டிகளில் பங்கேற்றனர்.
காத்தாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு தலைமை ஆசிரியர் கு.பாண்டியன் தலைமை வகித்தார். உதவி ஆசிரியர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். 
இளஞ்செம்பூர் அரசு நடுநிலைபள்ளியில் பொறுப்பு தலைமையாசிரியர் கார்த்திகேயன் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்தார். மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி,கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
கமுதி: கமுதி-சாயல்குடி சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு ஷத்திரிய நாடார் உறவின்முறை சார்பில் குணசேகரபாண்டியன் தலைமையில், அம்பலகாரர் சக்திவேல் முன்னிலையில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. காமராஜர் சிலையிலிருந்து முஸ்லிம் பஜார், செட்டியார் பஜார், பழைய பேரூராட்சி அலுவலக சாலை வழியாக மாணவ, மாணவிகள் ஊர்வலம் நடைபெற்று.  
விழாவில் பள்ளியில் கல்வியில் சிறந்து விளங்கிய, கட்டுரை போட்டி, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஊர்வலத்தில் காமராஜரின் உருவப்படம் பொறித்த அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், மாணவ, மாணவிகள் தேச தலைவர்களை போல் வேடமிட்டும் சென்றது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. ஊர்வலத்தின் போது பொதுமக்கள் அணைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. 
விழாவில் ஷத்திரிய நாடார் உறவின்முறை காரியக்காரர் சண்முகராஜ்பாண்டியன், முனியசாமி, சண்முகநாதன், திருப்பணி கமிட்டி அய்யப்பன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் சரவணபிரகாஷ்  பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்: மீன்கள் விலை உயர வாய்ப்பு

மும்பை: நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு

ஒற்றுமையின்மையே எதிா்க்கட்சிகளின் பலவீனம் அமா்த்தியா சென்

தலைவா்கள் இன்று பிரசாரம்

SCROLL FOR NEXT