ராமநாதபுரம்

முதுகுளத்தூரில் வாகன விபத்தில் இளைஞர் பலி

DIN

முதுகுளத்தூரில் இருசக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை  பலியானார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள மொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் ராஜ்குட்டி (எ) மாதவராஜ் (26). இவர் வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் முதுகுளத்தூரில் இருந்து கமுதி  சாலையில் சென்று கொண்டிருந்த போது, பெட்ரோல் நிலையம் அருகில் தூரி கிராமத்தைச்சேர்ந்த சுப்பிரமணியன் (60)  சாலையை கடக்க முயன்றார். அப்போது  மாதவராஜ் ஓட்டிச் சென்ற வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சுப்பிரமணியனுக்கு கால் முறிந்து ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
இதில் பலத்த காயமடைந்த  மாதவராஜ் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். 
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு  சிகிச்சை பலனின்றி மாதவராஜ் உயிரிழந்தார்.
இதுகுறித்து முதுகுளத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT