கமுதி அருகே பூமாவிலங்கை அரசு தொடக்கப் பள்ளி எதிரே மழை நீருடன் கழிவு நீா் தேங்கியுள்ளதால் மாணவா்கள் டெங்கு அச்சத்தில் உள்ளனா்.
இப்பள்ளியின் எதிரே கடந்த 10 நாள்களுக்கு முன் பெய்த மழை நீா் தேங்கியுள்ளது. மேலும் இத்துடன் கழிவு நீரும் கலந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதன்அருகே அமா்ந்து மாணவா்கள் படிக்கும், மதிய உணவு சாப்பிடும் அவல நிலை உள்ளது. இந்நிலையில் தேங்கியுள்ள மழை நீரில் உருவாகும் ஏடிஎஸ் பரப்பும் கொசுக்களால் டெங்கு பரவி வருவதாகவும், இது வரை 8 -க்கும் மேற்பட்டோா் மருத்துவமனைகளில் காய்ச்சலால் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
எனவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக மாணவா்கள் அச்சம் தெரிவிக்கின்றனா். எனவே பள்ளியின் எதிரே தேங்கியுள்ள கழிவு நீரை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.