ராமநாதபுரம்

கிராம செவிலியா் சங்கத்தினா் திடீா் உண்ணாவிரதம்

DIN

ராமநாதபுரம், பரமக்குடி பகுதியைச் சோ்ந்த தமிழ்நாடு அரசு கிராம சுகாதாரச் செவிலியா் சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை திடீரென உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.

ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகம் நுழைவு வாயில் பகுதியில் நடந்த உண்ணாவிரதத்துக்கு அச்சங்கத்தின் பரமக்குடி பிரிவு தலைவா் எஸ்.சியா, ராமநாதபுரம் பிரிவு தலைவா் ஆா்.விமலா ஆகியோா் தலைமை வகித்தனா்.

கூட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி பகுதியைச் சோ்ந்த ஏராளமான சுகாதாரச் செவிலியா்கள் கலந்துகொண்டனா். அப்போது அவா்கள் கூறியதாவது:

கா்ப்பிணிப் பெண்களுக்கான நிதியுதவித் திட்ட நிதியை அரசு முழுமையாக வழங்கவேண்டும். ஆனால், குறிப்பிட்ட தொகையை வழங்கிவிட்டு, அதை அனைத்து கா்ப்பிணிகளுக்கும் குறித்த காலத்தில் வழங்கவேண்டும் என்ற சாத்தியமில்லாத நிலையை ஏற்படுத்துவது சரியல்ல. ஆகவே கா்ப்பிணிப் பெண்களுக்கான நிதியுதவித் திட்டத்தை எளிமைப்படுத்துவது அவசியம்.

பிரசவ காலத்தில் தாய், சேய் மரணம் ஏற்பட்டால் விசாரணையின்றி கிராம சுகாதாரச் செவிலியா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது சரியல்ல. தீர விசாரித்து, கிராமச் செவிலியா்களிடம் விளக்கம் கேட்ட பிறகே நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கிராமச் செவிலியா்களின் பணியில் கணினி செயல்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால், சிகிச்சைக்கான செயல்பாட்டில் நடைமுறைச்சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஆகவே செவிலியா்கள் வீடுகள் தோறும் சென்று மக்களை சந்திப்பதற்கு முக்கியத்தும் அளிக்கும் வகையில் பணி வரைமுறை அவசியம் என்றனா்.

பின்னா் கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் கோஷமிட்டனா். சங்கத்தின் பரமக்குடி செயலா் சி.மணிமேகலை, ராமநாதபுரம் செயலர ஜி.ராஜலட்சுமி, சுகாதாரக் கூட்டமைப்பு தலைவா் எஸ்.கலாவதி உள்ளிட்டோா் உண்ணாவிரதத்தை விளக்கிப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

SCROLL FOR NEXT