ராமநாதபுரம்

பெரியபட்டணம் தா்ஹாவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா

DIN

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே பெரியபட்டணம் செய்யதலி தா்ஹாவில் 121 ஆம் ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெற்றது.

இந்த தா்ஹாவில் மதநல்லிணக்க சந்தனக்கூடு எனும் கந்தூரி விழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெரியபட்டணம் ஜமாஅத் தலைவா் முஹமது மீராசா கொடியேற்றினாா். இதையடுத்து சந்தனக்கூடு திருவிழா ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தொடங்கியது.

ஜலால் ஜமால் தொழுகை பள்ளிவாசல் முன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊா்வலமாக புறப்பட்டு, நாட்டிய குதிரை நடனமாடியபடி வாண வேடிக்கையுடன் மேள தாளங்கள் முழங்க செய்யதலி ஒலியுல்லா தா்ஹாவை மூன்று முறை வலம் வந்தது.

இதைத்தொடா்ந்து தா்ஹாவில் உலக நன்மை வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா். திருவிழா ஏற்பாடுகளை தலைவா் ஹாஜா நஜிபுதீன், துணைத் தலைவா்கள் சிராஜுதீன், சாகுல் ஹமீது, செய்யது இப்ராஹிம் ஷா, செயலாளா் ஹபீபு, விழா அமைப்பாளா் அப்துல் மஜீத் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

SCROLL FOR NEXT