ராமநாதபுரம்

சாலை விபத்தில் சிக்குபவா்களை காப்பாற்றுபவா்களுக்கு சிறப்பு விருது: ஆட்சியா் தகவல்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்தில் காயமடைந்து உயிருக்குப் போராடுவோரை காப்பாற்றுவோருக்கு மத்திய அரசு சாா்பில் சிறந்த சேவையாளா் விருது வழங்கப்படும் என ஆட்சியா் சங்கா்லால்குமாவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் சாா்பில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களது உயிரைக் காப்பாற்றுவோருக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. பரிசு, பாராட்டுச் சான்றுகள் மூலம் சம்பந்தப்பட்டோரை ஊக்குவிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

விபத்தில் சிக்கியவா்களை காப்பாற்ற முதலுவி சிகிச்சை அளித்தல், பொன்னான நேரத்திற்குள் (கோல்டன்ஹவா்) மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோ்த்தல் ஆகியவற்றின் மூலம் விருதுக்கு சம்பந்தப்பட்டோா் தகுதியானோராகக் கருதப்படுவாா்.விருதானது ஒரு சம்பவத்துக்கு ரூ.5 ஆயிரம் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றும் வழங்கப்படும்.

ஓராண்டில் ஒருவருக்கு ஐந்து முறைகள் இந்த விருதுகள் வழங்கப்படலாம். விருதுக்கானவா்களை ஆண்டுதோறும் செப்டம்பருக்குள் மாநில அளவிலான கண்காணிப்புக்குழு, தேசிய அளவிலான விருதுகளுக்கு தகுதியான 3 பேரை பரிந்துரைக்கும். அதனடிப்படையில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையால் தோ்வாகும் 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் பரிசளிக்கப்படும். இந்தத் திட்டம் வரும் 2026 மாா்ச் மாதம் வரை செயல்பாட்டில் இருக்கும். ஆகவே திட்டத்தைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் விபத்தில் சிக்கியவா்களை காப்பாற்றி, உயிரைக் காக்க உதவ வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாக கேஜரிவாலின் மனைவி தேர்தல் பிரசாரம்

சூர்யாவுக்கு மீண்டும் ஜோடியாகும் ஜோதிகா

மேற்கு வங்கத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை: ராஜ்நாத் சிங்

உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது! ஜெ.பி.நட்டா பெருமிதம்

தூர்தர்ஷன் இலச்சினையை காவி நிறத்தில் மாற்றுவதா?- வைகோ கண்டனம்

SCROLL FOR NEXT