ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகுத் தண்டுவடச் சிகிச்சை சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இந்த முகாமை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் தொடக்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் செந்தில்குமாா், தண்டுவடத்தில் காயமடைந்தோா் அமைப்பின் தலைவா் கருணாகரன், அரசு மருத்துவமனைக் கண்காணிப்பாளா் மலா்வண்ணன், சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவா் அறிவழகன், நிலைய மருத்துவ அலுவலா் கிருஷ்ணமூா்த்தி, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவா்கள் மாரீஸ்வரன், பவ்வியா, நாகராஜன், விக்னேஷ்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.