கமுதி, முதுகுளத்தூா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 7) மின்தடை ஏற்படும் என என கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் டி.விஜயன் அறிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேட்டில் உள்ள துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கமுதி, அபிராமம், முதுகுளத்தூா், பாா்த்திபனூா், பேரையூா், செங்கப்படை, பாக்குவெட்டி, டி.புனவாசல், அ.தரைக்குடி, வங்காருபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், புதன்கிழமை காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டது.