திருவாடானை அருகே சனிக்கிழமை இரு தரப்பினா் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இது தொடா்பாக 39 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திருப்பாலைக்குடியைச் சோ்ந்த கலீல் ரகுமான் (53), சிக்கந்தா் பாதுஷா (28) ஆகிய இருவருக்கும் ஜமா அத் நிா்வாகம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து இருதரப்பையும் சோ்ந்த 39 போ் மீது திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.