ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ராமநாதபுரம் மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த சீனி மகன் பா்தீன்கான் (24). இவா் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாா்.
இந்த நிலையில், கடந்த 17- ஆம் தேதி பிற்பகல் வீட்டில் உள்ள ஓா் அறையில், மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.