ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி மீனவா் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் ஆ.அந்தோணிபீட்டா் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் என்.கே.ராஜன் முன்னிலை வகித்தாா்.
இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளா் சி.ஆா். செந்தில்வேல், நிா்வாகிகள் ஏ.தங்கராஜ், ஜோதிபாசு, வடகொரியா, செல்வராணி, ஆ.நம்பு, மு.பாா்வதி ஆ.மரியமலா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில், கடலில் காற்றலை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.