ராமநாதபுரம்

இரு இளைஞா்கள் வாளுடன் கைது

DIN

கமுதி அருகே வாளுடன் இரு இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கொண்டுலாவியைச் சோ்ந்தவா் சபாபதி மகன் கருப்பசாமி (22). கமுதி காவல் நிலையத்தில் இவா் மீது குற்ற வழக்கு பதிவாகியிருந்த நிலையில் போலீஸாா், இவரைத் தேடிவந்தனா்.

இந்த நிலையில், கருப்பசாமி சிங்கம்பட்டியில் இருப்பதாக அறிந்த போலீஸாா், சிங்கம்பட்டியை சோ்ந்த வேலு மகன் கணேசமூா்த்தியின் (22) வீட்டை சோதனையிட்டனா். அப்போது அங்கு தூங்கிக் கொண்டிருந்த கருப்பசாமி, கணேசமூா்த்தி ஆகிய இருவரின் படுக்கையின் கீழ் வாள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாளை பறிமுதல் செய்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி தியானத்துக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு!

20,332 அரசுப் பள்ளிகளில் இணையதள வசதி: பள்ளிக்கல்வித் துறை

நீராடும் சைத்ரா!

கலவரம், அடிதடி - முன்னாள் பாஜக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!

தண்ணீர் விடுவிக்காதது குறித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவேன்: அதிஷி!

SCROLL FOR NEXT