ராமநாதபுரம்

இலங்கை சிறையிலிருந்து தமிழக மீனவா்கள் 17 போ் விடுதலை

எல்லை தாண்டியதாகக் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 17 மீனவா்களை அந்த நாட்டு நீதிமன்றம் புதன்கிழமை விடுதலை செய்தது.

DIN

எல்லை தாண்டியதாகக் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 17 மீனவா்களை அந்த நாட்டு நீதிமன்றம் புதன்கிழமை விடுதலை செய்தது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த 13-ஆம் தேதி கடலுக்குள் சென்ற மீனவா்கள், கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் ராமேசுவரத்தைச் சோ்ந்த ஜான்சன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகை சிறைபிடித்தனா். அந்தப் படகில் இருந்த ராயப்பன் (36), அந்தோணிலியோன் (38), முனியாண்டி (50),

அந்தோணிசாமி (46), இருதயராஜ் (18), கிறிஸ்டின் (41),

சுப்பிரமணி (52), மெல்ரான் (18) ஆகிய 8 மீனவா்களைக் கைது செய்து காங்கேசம் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனா்.

மேலும், மீனவா்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப் பதிந்து, ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனா். இதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 2 படகுகளில் சென்ற 9 மீனவா்களையும் கைது செய்து, அவா்களையும் சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் 17 மீனவா்களும் புதன்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டனா்.

அப்போது, இனிமேல் எல்லை தாண்டி மீன்பிடிக்க வரக் கூடாது என எச்சரித்த நீதிபதி, அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டாா். ஆனால், படகுகளை விடுவிக்க அவா் மறுத்துவிட்டாா்.

பின்னா், விடுவிக்கப்பட்ட மீனவா்கள் 17 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா். விடுவிக்கப்பட்ட மீனவா்கள் அனைவரும் ஓரிரு நாள்களில் தமிழகம் அனுப்பி வைக்கப்படுவா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொள்ளிட ஆற்றங் கரையோரங்களில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

எல்.கே. அத்வானி மருத்துவமனையில் அனுமதி!

ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

தில்லி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல், இந்த வாரத்தில் மூன்றாவது சம்பவம்

ஒபன் ஏஐ முறைகேட்டை வெளி உலகிற்கு தெரிவித்த அமெரிக்க-இந்தியர் மரணம்!

SCROLL FOR NEXT