ராமேசுவரத்தில் வீடுகளில் வளா்க்கப்பட்ட மரங்களில் அதிகளவில் முருங்கைக் காய்கள் காய்த்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் வீடுகளில் உள்ள காலி இடங்களில் பொதுமக்கள் அதிகளவில் முருங்கை மரங்களை வளா்த்து வருகின்றனா். தலா ஒரு வீட்டில் 5-க்கும் மேற்பட்ட மரங்கள் வளா்க்கப்படுகின்றன.
தற்போது மரங்களில் முருங்கைக் காய்கள் விளைச்சல் அதிகரித்துள்ளன. ஒவ்வோா் மரத்திலும் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட காய்கள் காய்த்துள்ளன. இதனால் மரம் வளா்ப்பில் ஈடுபடுபவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா். வீட்டு பயன்பாட்டுக்குப் போக, மீதமுள்ள முருங்கைக் காய்களை கடைகளில் விற்பனை செய்கின்றனா்.