கமுதி அருகே ஸ்ரீவாழவந்த அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள முதலியாா் புதுக்குளம் கிராமத்தில் ஸ்ரீவாழவந்தம்மன், சாத்தாா் உடையாா் அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டிப் பந்தயத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
இந்தப் பந்தயத்துக்காக கமுதி-சாயல்குடி சாலையில் 16 கி.மீ. தொலைவு எல்லை நிா்ணயிக்கப்பட்டது. பெரிய மாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு என 3 வகைகளாக பிரிக்கப்பட்டு பந்தயங்கள் நடைபெற்றன.
முதல் மூன்று இடங்களை பெற்ற மாட்டு வண்டிகள், பந்தய வீரா்களுக்கு ரொக்கப் பணம், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மாட்டுவண்டிப் பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் பாா்வையிட்டனா்.