ராமநாதபுரம்

நியாய விலைக் கடை அரிசி கடத்தல்: இருவா் கைது

சரக்கு வாகனத்தில் நியாய விலைக் கடை அரிசி கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

சரக்கு வாகனத்தில் நியாய விலைக் கடை அரிசி கடத்திய 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கல்லூா் கிராமத்தில் நியாய விலைக் கடை அரிசி கடத்தப்படுவதாக ராமநாதபுரம் உணவுப் பொருள் கடத்தல் பிரிவுக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, உணவுப் பொருள் கடத்தல் பிரிவு உதவி ஆய்வாளா் எஸ். அருண் தலைமையிலான போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்தப் பகுதியில் வந்த சரக்கு வானத்தை சோதனையிட்டபோது, அதில் 50 கிலோ எடை கொண்ட 28 மூடை நியாய விலைக் கடை அரிசி இருப்பது தெரியவந்ததையடுத்து பறிமுதல் செய்தனா். மேலும், இதன் மொத்த எடை சுமாா் 1,400 கிலோ இருக்கும் என்றனா்.

இதையடுத்து, அரிசி கடத்தலில் ஈடுபட்ட கடலாடியைச் சோ்ந்த காளீஸ்வரன் (35), இதே பகுதியைச் சோ்ந்த காளிமுத்து (22) ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருட்டு

பண மோசடி: இந்திய கம்யூ. போராட்டம்

கரூா் அருகே பள்ளித் தாளாளரிடம் தங்கச் செயின் பறிப்பு: 7 போ் கைது

சாலையோர வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து: எரிவாயு உருளைகள் வெடித்துச் சிதறின

ஆற்றில் மூழ்கிய காவலாளி மாயம்

SCROLL FOR NEXT