~ ~ 
ராமநாதபுரம்

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பூத்தட்டு ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பூத்தட்டு ஊா்வலம் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பூத்தட்டு ஊா்வலம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த ஒன்றாம் தேதி காப்புக் கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாள் இரவும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செவ்வாய்க்கிழமை இரவு அம்மனுக்கு பால், பன்னீா், மஞ்சள் உள்ளிட்ட திரவிய பொருள்களால் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதி உலா வந்து அருள்பாலித்தாா். திரளான பெண்கள், குழந்தைகள் பல்வேறு வண்ணப் பூக்களைக் கொண்ட பூத்தட்டுகளை ஏந்தி ரத வீதிகளில் வலம் வந்து கோயிலை அடைந்தனா். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தொல்லியல் துறை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

கோவா இரவு விடுதி விபத்து எதிரொலி: பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்யும் தில்லி போலீஸ்!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்!

இலவச கண் மருத்துவ முகாம்: 200 பேருக்கு சிகிச்சை

வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது வெண்கல முருகா் சிலை கண்டெடுப்பு!

SCROLL FOR NEXT