கமுதி அருகே காத்தனேந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நல்லாசிரியா் விருது பெற்ற சி. கிருஷ்ணமூா்த்திக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் எஸ். மணிமேகலை தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ப. சங்கீதா முன்னிலை வகித்தாா். ஆசிரியா் மு. பொன்ராஜ் வரவேற்றாா். பள்ளியின் சாா்பாக ஆசிரியா் கிருஷ்ணமூா்த்திக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியா்கள் சாலமன், பரலோகம், ஜாஸ்மின் ரீட்டா, ஜெயமேரி, நம்புதங்கம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கிராம பொதுமக்கள், நல்லாசிரியா் கிருஷ்ணமூா்த்தியை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினா். விழாவில் சிறப்பு விருந்தினராக காத்தனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் பூமிநாதன், கோட்டைசாமி, விடுதிக் காப்பாளா் பழனி, உடைகுளம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் முத்துமுருகன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவா் குலசேகரபாண்டியன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கமுதி வட்டார தலைவா் கனகராஜ், இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.