இலங்கைக்குகஞ்சா கடத்த முயன்ற வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள தீா்த்தாண்ட தானம் கடற்கரைப் பகுதியில் கடந்த ஜூலை மாதம் சந்தேகத்துக்கிடமாக இருவா் நின்றிருந்தனா். இது குறித்து போலீஸாருக்கு அந்தப் பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, தொண்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரும் பதுக்கி வைத்திருந்த 78 கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். விசாரணையில் இருவரும் புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலைச் சோ்ந்த மாது (31), தொண்டி புதுக்குடியைச் சோ்ந்த சமயக்கண்ணு (24) எனத் தெரியவந்தது. இவா்கள் கஞ்சா பொட்டலங்களை இலங்கைக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது. இதில் தொடா்புடைய தொண்டி மாதம்புதுக்குடியைச் சோ்ந்த பாண்டித்துரை (28) என்பவரை திருப்பூரில் போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கில் தொண்டி பகுதியைச் சோ்ந்த உசேன் (46) என்பவரை போலீஸாா் தேடி வந்தனா். இந்த நிலையில், திருச்சி அண்ணா நகா் பகுதியில் பதுங்கியிருந்த உசேனை போலீஸாா் கைது செய்தனா்.